A storm is forming in the Bay of Bengal

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இதனால் வங்கக்கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் புயல் உருவாக உள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 1 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக வலுப்பெற்றதும் அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.