s1

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

Advertisment

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு அதிகாரிகளுடன் வந்தார். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisment

ஆட்சியர் முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் வாயிற்கதவுகள் மூடப்பட்டு, பூட்டு போடப்பட்டது. இதன் பின்னர் வாயில் கதவில் தமிழக அரசின் அரசாணை ஒட்டப்பட்டது. இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீர் நந்தூரி சீல் வைத்தார்.

கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை அரசாணையினால் இன்று இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது.

Advertisment