Skip to main content

எஸ்.பி.கே. நாகராஜனிடம் 6 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

Published on 23/07/2018 | Edited on 23/07/2018

 

naga

 

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்பணிகளை செய்து வரும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவரது உறவினர்களின் இடங்களில்  கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  30க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில்  183கோடி ரூபாய் பணம், 103கிலோ தங்கக் கட்டிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. பண்டல் பண்டல்களாக முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

 

naga

 

இதன் அடிப்படையில் செய்யாதுரையின் மகன்  நாகராஜன், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன், தொழிலதிபர் தீபக், துணை ஒப்பந்ததாரர் பூமிநாதன், சேத்துப்பட்டு ஜோஸ் உள்ளிட்ட 15 பேருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இன்று மாலைக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. 

 

இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு நாகராஜன் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.  அவரிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  8.30 மணிக்கு அவர் விசாரணை முடிந்து வெளியே சென்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 'பார்' நாகராஜை மடக்கிய சிபிஐ!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய "பார்' நாகராஜை மடக்கிட்டாங்கன்னு கடந்த  8ஆம் தேதி பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஆளும்கட்சி அதிகாரப் புள்ளிகளிடம் செல்வாக்கு பெற்ற "பார்' நாகராஜை, லோக்கல் போலீஸ் விசாரிக்காம காப்பாத்திக்கிட்டிருந்தது என்ற குற்றச்சாட்டும் வந்தது. மே 8-ந் தேதி காலை 8.30 மணியிலிருந்து அவரைக் காணோம்ன்னு அவர் குடும்பத்தினரும் நண்பர்களும் பரபரப்பா தேடினாங்க.
 

pollachi issues



அப்புறம் 11 மணியளவில் அவர் வீட்டுக்கு வந்திருக்காரு. வீட்டுக்கிட்ட உள்ள தியேட்டர் வாசலில் அவர் நின்னுக்கிட்டிருந்தப்ப, அங்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய், 3 மணிநேரம் விசாரிச்சிட்டு, 11 மணிவாக்கில் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டதா அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்தி பரவியது. ஆனால் பார் நாகராஜோ, நான் என் மாமியார் வீட்ட்டுக்குத்தான் போயிருந்தேன்… வேற மாதிரி கிளப்பி விட்டிருக்காங்கன்னு சொல்றாராம். மாமியார் வீடான்னு பலருக்கும் ஆச்சரியமாக கேட்டதாக அந்த ஏரியாவில் ஒரு பேச்சு அடிபட்டது. பொள்ளாச்சி விவகாரத்தை  சி.பி.ஐ.யாவது சரியா கையாளுமா, அல்லது குற்றவாளிகளை விட்டுட்டு பாலியல் வன் கொடூரத்தை அம்பலப் படுத்தியவங்களை குறி வைக்குமான்னு போகப் போகத்தான் தெரியும்னு அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
 

Next Story

பொள்ளாச்சி வன்கொடுமை: அதிமுக பிரமுகர் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

Published on 11/03/2019 | Edited on 11/03/2019



பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கைதான அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 

''ஆளுங்கட்சி ஆதரவில் மாணவிகளை சீரழித்து வீடியோ எடுத்த பாலியல் கேங்!'' என்ற தலைப்பில் நக்கீரன் 2019 மார்ச் 09-12 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி வெளியானதும், தமிழ்நாடே அதிர்ச்சியடைந்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? இதற்கு துணை போகிறதா? என்று கண்டன குரல் எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நக்கீரனில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி,  ''தமிழ்நாடே குலைநடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்திற்குரியது'' என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 

ops-eps-nagaraj-admk