Advertisment

அதி கனமழையின் பிடியில் தென் மாவட்டங்கள்; அணைகளின் நிலவரம்

Southern districts gripped by heavy rain; Status of dams

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக ஏற்பட்டவெள்ளத்தில் இருந்துபாதிக்கப்பட்டவர்களை இரண்டாவது நாளாக மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளது.ஹெலிகாப்டர்கள்மூலம் உணவு விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் அதிக கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 740 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை 4 மணி அளவில்முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தேங்கியுள்ள நீர் படிப்படியாகவடியதொடங்கியுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஓய்ந்ததால்பாபநாசம், மணிமுத்தாறு,சேர்வலாறுஅணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு,சேர்வலாறுஅணைகளில் இருந்துதிறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம்கனஅடியாககுறைக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு குறைந்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கின் ஆக்ரோஷம் குறைந்துள்ளது.நேற்று வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில்இன்றுதாமிரபரணியில்சுமார் 4000 கன அடி நீர் செல்கிறது.

Advertisment

வைகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக எச்சரிக்கை தொடர்கிறது.நீர்பிடிப்புபகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,150 கன அடியாக உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மூன்றாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி மொத்த உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69 அடியாகஉயர்ந்ததால்இந்த மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணை முழு கொள்ளளவு எட்டியவுடன் உபரி நீர் வெளியேற்றப்படும் எனநீர்வளத்துறைசார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதுவைகைஅணையில் இருந்துவினாடிக்கு 3,200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Thoothukudi nellai Kanyakumari thenkasi weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe