Skip to main content

கஞ்சா விற்பவனின் உரிமை! காவல்துறை ஆற்றும் கடமை! -இதுதான் போலீஸ் நடைமுறை!

Published on 05/07/2019 | Edited on 06/07/2019

 

பொதுவாக,  காவல்துறை வழக்கு பதிவு செய்யும் நடைமுறைகள் சற்று எசகுபிசகாகவே இருக்கும். இதனை ‘எழுதப்படாத விதி’ என்று சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில். உதாரணத்துக்கு, சிவகாசியில் இன்று கைதான ‘சிலோன் ராஜா’ மீதான வழக்கு. 

 

d

 

சிலோன் ராஜா என்பவன் கஞ்சா விற்பனை செய்யும் பேர்வழி. 1050 கிராம் கஞ்சா வைத்திருந்தபோது பிடிபட்டதாக  இவன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது சிவகாசி நகர் காவல்நிலையம். எப்படி தெரியுமா? ரகசிய தகவலாளி சொன்ன தகவலைப் பெற்று, கஞ்சா தடுப்பு சம்பந்தமாக ரோந்து சுற்றி வரும்போது, கையில் வெள்ளைநிற நைலான் பையுடன் இருந்த சிலோன் ராஜா, போலீசாரைப் பார்த்ததும் ஓடினானாம். அவனைப் பிடித்ததும், ‘உம்மிடம் கஞ்சா என்னும் போதைப் பொருள் உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆதலால், உம்மை சோதனை செய்ய வேண்டும்.

 

அதற்கு நீர் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களிடமோ, அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி முன்போ,  அழைத்துச்செல்ல வேண்டும் என்று சொல்லுவதற்கு உமக்கு உரிமை உண்டு. அவ்வாறு உம்மை அழைத்துச் செல்லவா? என்று கேட்டதற்கு,  ‘தேவையில்லை. போலீஸ் பார்ட்டியாகிய தாங்களே சோதனை செய்யலாம்.’ என்று சொன்னானாம். உடனே, போலீசார் அவன் வைத்திருந்த வெள்ளை நிற நைலான் பையை வாங்கி நுகர்ந்து பார்க்க கஞ்சா வாடை அடித்ததாம். தராசில் எடை போட்டதில்,  சரியாக 1050 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதில், 50 கிராம் கஞ்சாவை தனியாகவும், 1000 கிராம் கஞ்சாவைத் தனியாகவும் பொட்டலம் போட்டு, இரண்டுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனராம். 

k

NDPS (The Narcotic drugs and Psychotropic Substances Act) எனப்படும் போதை மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டத்தின் கீழ் மேற்கண்டவாறுதான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கஞ்சா வைத்திருக்கும் நபர், ‘போலீஸே என்னை சோதனை செய்யலாம்’ என்று கூறியதாக வழக்கு பதிவு செய்வது, சட்டத்தின் பார்வையில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சராசரி மனிதனின் பார்வையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  

      

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு எப்படி பதிவாகிறது தெரியுமா? என்று விபரத்தைச் சொன்னார் ஒரு வழக்கறிஞர்.    குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி,  ஊதச் சொல்லி சோதனை செய்து,  அவர் மது அருந்தியிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் காவல்துறையினர். அந்த நபர் மது அருந்தியிருக்கிறார் என்று மருத்துவர் சான்று வழங்குவதற்கு முன்,  மருத்துவ ரீதியாக சோதனை நடத்துவதற்கான வசதி பல அரசு மருத்துவமனைகளிலும் கிடையாது.  ஆனாலும், காவல்துறையினர் அழைத்துவரும் நபரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தாமல்,  ‘குடிபோதையில் இருக்கிறார்’ என்று அரசு மருத்துவர் சான்று வழங்குவதுதான் பெரும்பாலான வழக்குகளில் நடக்கிறது. இந்த நடைமுறையை,   ‘காவல்துறைக்கும் அரசு மருத்துவருக்குமான அண்டர்ஸ்டேண்டிங்’ என்கிறார்கள். 

 

சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், ஒருவேளை சட்டத்தை அறிந்திருந்தாலும், ‘நான் கஞ்சா விற்றது உண்மைதானே? குடிபோதையில் வாகனத்தை நான் ஓட்டத்தானே செய்தேன்?’ என்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் பலரும் இருப்பதாலும், இதுபோன்ற போலீஸ் நடைமுறைகள் காலம் காலமாகத் தொடர்ந்தபடியே உள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.