ns

Advertisment

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் உடல் இன்று காலை 11.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ni

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவச்சந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்கு பின்னர் சிவச்சந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Advertisment

t

தமிழிசை சவுந்தரராஜன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிவச்சந்திரன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

n

Advertisment

வளர்மதி, எம்.பி. குமார், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ முருகேஸ்வரி, பிஜேபி மாநில தலைவர் தமிழிசை, திமுக சார்பில் அன்பில் மகேஷ், லால்குடி சௌந்திரபாண்டியன், திமுக நகர செயலாளர் அன்பழகன், பிஜேபி கோவிந்தன், தா.ம.க புலியூர் நகராஜ், உள்ளிட்டோர் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பல்வேறு கட்சியினரும், பல்வேறு இயக்கத்தினரும் திரண்டு வந்து மலர்வளையம், மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ty

சிவசந்திரன் உடல் வந்தவுடன் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் we want Revenge என்று கோஷங்கள் எழுப்பியப்படியே இருந்தனர். இதன் பின்னர் சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரான கார்குடிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.