Advertisment

சென்னை தனியார் பள்ளி வேனில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 5 பேரிடம் விசாரணை

school

சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் ஒமேகா இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

Advertisment

இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மாணவ மாணவிகளை அழைத்த வருவதற்காக இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்களில் வரும் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேனில் உள்ள அட்டண்டர்கள்மீது புகார் எழுந்தது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த புகார் குறித்து மாங்காடு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வேன் டிரைவர்கள்5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

van private school Chennai sexual harassment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe