Advertisment

செந்தில் பாலாஜி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு திடீர் மாற்றம்!

Senthil Balaji case suddenly changed to CBCID

Advertisment

கரூர் ஆட்சியரை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மிரட்டிய புகார் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு திடீரென மாற்றப்பட்டது.

மே- 12 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை தி.மு.க. எம்எல்ஏ செந்தில் பாலாஜி மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தாந்தோன்றிமலை போலீசார் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், திடீரென சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karur Senthilpalaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe