ADVERTISEMENT

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி...

08:50 PM May 30, 2020 | rajavel



கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை முடக்கிப் போட்டு விட்டது கரோனா வைரஸ் பரவலும் அதனால் ஆளும் அரசுகள் போட்டுள்ள ஊரடங்கும். இந்தநிலையில் மென்பொருள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை அவரவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் முறைக்கு கொண்டு வந்து அதை பழக்கப்படுத்திவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அவரவர் வீட்டில் இருந்தபடியே இணையம் வாயிலாக அலுவலக கூட்டங்களில் பங்கேற்பது என அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் கூட்டம் வரை நடக்கிறது. அதுபோல ஹாவார்டு, கேம்பிரிட்ஜ் என உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மக்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது என இணையம் வழி வாயிலாக இலவசமாகப் பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றன. யூடியூப், ஜூம், கூகுள் மீட்டிங் என பல நூறு மென்பொருட்கள் இதற்கு உதவி செய்கின்றன.

இதன் தொடர்ச்சியாகத்தான் வழக்கறிஞர்களுக்கு சட்டப் பயிலரங்க வகுப்புகளை மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். தமிழகத்தில் சுமார் 80,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக 90 சதவீதமான நீதிமன்றப் பணிகள் நடைபெறவில்லை. ஜாமீன் மனுக்கள் என அவசர வழக்குகள் மற்றும் சிறிதளவு நீதிமன்றத்தில் விசாரிக்க படுகின்றன.

வருங்காலத்தில் வழக்கறிஞர்கள் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இணையம் வாயிலாக பயிற்சி பெறத்தான் ப.பா.மோகன் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு எஸ் நாகமுத்து அவர்களின் வழிகாட்டுதலில் வெபினர் எனப்படும் பயிலரங்குகளை தினமும் நடத்தி வருகின்றார். ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இன்றைய தேதி வரை சுமார் 37 தொகுப்புகள் இதில் நடந்துள்ளன. நாள்தோறும் ஐநூறு முதல் ஆயிரம் வழக்கறிஞர்கள் செயலி மூலமாக இதில் பங்கு பெற்று வருகின்றனர்.


இதில், சாட்சிய சட்டம், இந்திய வாரிசுரிமை சட்டம், குடும்ப சட்டங்கள், இந்திய தண்டனை சட்டம் விசாரணை நடைமுறை சட்டங்கள், ஊடக சுதந்திரம், நக்கீரன் நடத்திய சட்டப் போராட்டம் என பல்வேறு தலைப்புகளில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் என் மனோகரன் சங்கரசுப்பு, கருணாநிதி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி, மூத்த வழக்கறிஞர்கள் கோயம்புத்தூர் கே ஆர் சங்கரன், சஞ்சயன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் வெவ்வேறு தலைப்புகளில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த வகுப்புகளில் பங்கெடுக்கின்றனர். ஏராளமான சட்ட விளக்கங்கள், முன்னோடியான தீர்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பயிற்சி வகுப்புகள் இளம் வழக்கறிஞர்களுக்கு என மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது என்கிறார்கள் இளம் வழக்கறிஞர்களான சுபாஷ் ப.பா.மோகன், கலையரசு உள்ளிட்டோர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT