ADVERTISEMENT

மெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது... -சீமான்

06:57 PM Sep 22, 2018 | kamalkumar

ADVERTISEMENT

43 இஸ்லாமிய தமிழர்கள் விடுதலை என்று அண்ணன் செரிஃப் பேசினார்கள். அவர்களோடு இருந்து, அவர்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் துயரங்களில் நாங்களும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு அதிகமாக யார் தண்டனை பெற்றிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் விடுதலை செய்வதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு. எந்தவித பாகுபாடும் இல்லை, அனைவருக்கும் விடுதலை. அருகிலிருக்கும் கேரளாவில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தால் விடுதலை. வேலூர் சிறையிலே இருக்கும்போது ஒரு மலையாளி என்னிடத்திலே ஒரு கோரிக்கை வைக்கிறார், எப்படியாவது என்னை கேரள சிறைக்கு மாற்றுவதற்கு உதவி செய்யுங்கள்.

ADVERTISEMENT


ஏனென்றால் எங்கள் மாநிலத்தில் ஏழு ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்ற எல்லாரையும் விடுதலை செய்துவிடுவார்கள். நான் பதினொறு ஆண்டுகள் சிறையிலிருக்கிறேன், என்னை கேரளாவிற்கு மாற்றிவிடுங்கள் என்று சொல்கிறார். தண்டனை என்பது என்ன, நான் சொல்லல அண்ணல் காந்தியடிகள் சொல்கிறார். சிறை என்பது ஒரு கொலைக்களம் அல்ல, அது குற்றவாளிகளுக்கான மனநல மருத்துவமனை என்று சொல்கிறார். மரணதண்டனை நாம் வேண்டாம் என்று கூறியது, மரணம் யாருக்கும் தண்டனையாகாது, அது முடிவு. மரணம் மற்றவர்களுக்குதான் தண்டனையாகிவிடும். எனவே தண்டனை என்பது ஒருவன் செய்த தவறுக்கு வருந்தி, திருந்தி மறுபடியும் வாழ வாய்ப்பளிப்பதுதான் தண்டனை. இதுதான் உலக நியதி. உலகின் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்திருக்கவேண்டிய நாடு இந்தியா, ஆனால் அதை கடைபிடிக்கவில்லை. இங்க ரொம்ப பாரபட்சம் இருக்கு, வேண்டியவன் வேண்டியவன் என்று. தீர்ப்பிலேயே நிறைய பாகுபாடுகள் இருக்கின்றன.

அண்மையில் ஒரு தீர்ப்பு வந்தது மெரினாவில் போராட அனுமதியில்லை என்று, ஆனால் புதைக்க அனுமதி இருக்கிறது. எவ்வளவு உயர்வான தீர்ப்பு. அதை நான் திராவிட சுடுகாடு என சொல்லிவிட்டேன் என்று கொந்தளிக்கிறார்கள். நான் சொல்லவில்லை திராவிட சுடுகாடு என்று, அவர்கள்தான் அறிஞர் அண்ணாவை புதைக்கும்போது இது கடற்கரை அல்ல, இது கூவம் ஆற்றங்கரையிலுள்ள சுடுகாடு என்று எழுதினார்கள். ஐயா கருணாநிதியை புதைப்பதற்காக நள்ளிரவில் நீதிமன்றத்தின் கதவைத்தட்டி போராடி உரிமையைப் பெற்றோம் என்கிறார்கள், இப்படி ஒரு மக்கள் பிரச்சனைக்காவது நீதிமன்றத்தின் கதவைத்தட்டி பெற்றுக்கொடுத்ததுண்டா, ஒன்னும் கிடையாது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT