Advertisment

"நீங்களே பார்த்துக்குங்க..!" - EPS அழைப்பு! - OPS நிராகரிப்பு!

ddd

Advertisment

தேர்தல் முடிவுகள் பற்றி ஆளுந்தரப்புக்கு வருகிற ரிப்போர்ட் ஒரு சில சமயங்களில் நம்பிக்கையையும், ஒரு சில சமயங்களில் அதிர்ச்சியையும் தருகிறது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி, கடந்த 6ஆம்தேதி ஓட்டுப் போடுவதற்காக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. பின்னர் அங்குள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்துவிட்டுசேலம் திரும்பிய அவர், சேலத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

தேர்தல் நேரத்தில் சேலத்தில் முகாமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமியிடம், உளவுத் துறையினர் ‘எக்ஸிட் போல்’ மூலம் கிடைத்த ரிசல்ட்டை 8ஆம்தேதி ரிப்போர்ட்டாகக் கொடுத்திருக்காங்க. அதில் வெற்றி வாய்ப்பு பற்றி 10% அளவுக்குத்தான் நம்பிக்கை தந்திருக்காங்க. 90% எதிர்த்தரப்புக்கு சாதகம்னு சொல்லப்பட்டிருந்ததாம். குழப்பமடைந்த எடப்பாடி பழனிசாமி உடனே ஓ.பி.எஸ்.சைத் தொடர்புகொள்ள, எனக்கும் அப்படித்தான் ரிப்போர்ட் வந்திருக்குன்னு அவரும் சொல்லியிருக்காரு. சேலத்துக்குப் புறப்பட்டு வாங்க. அடுத்தமூவ் பத்தி நாம் ஆலோசிக்கலாம்ன்னு கூப்பிட்டிருக்காரு எடப்பாடி. நாலு வருசமா நீங்கதானே முடிவுகளை எடுத்தீங்க. இதையும் நீங்களே பார்த்துக்குங்கன்னு ஓ.பி.எஸ். சொல்லிட்டாராம்.இதுபற்றி தன்னை சந்திக்க வந்த அமைச்சர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

Election admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe