Skip to main content

12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
School Education Department Notification for Attention Class 12 candidates

தமிழ்நாடு பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே போல், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேர்வு தொடங்கப்பட்டு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி (இன்று) முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

‘10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் கவனத்திற்கு’ - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
appearing for Class 10th Exam Dept of Exam
மாதிரிப் படம்

தமிழகத்தில் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் (24.02.2024) பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் தோன்றும் பக்கத்திலுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பப்ளிக் எக்ஸ்சாமினேசன் மார்ச் / ஏப்ரல் - 2024 ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், நிரந்த பதிவெண், மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மார்ச் / ஏப்ரல் - 2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.