சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ்! - ஊடகத்தினரை அவதூறாகப் பேசி தாக்க முயற்சி!

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் மதுரை மத்திய சிறையிலிருந்து, போலீஸ் வேன் மூலம் அழைத்துவரப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தபட்டனர்.

இந்நிலையில், செய்தி சேகரிப்பதிற்காக ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் கீழ் நுழைவாயில் பகுதியில் நின்று ஒளிப்பதிவு செய்தனர். இதையடுத்து வழக்கு முடிவடைந்து சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது, மதுரை மாநகரக் காவல்துறைஉளவுத்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஊடகத்தினர் குறித்துத் தவறுதலாகக் கூறியதால், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், ஊடகத்தினரை அவதூறாகப் பேசியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டினர்.

குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை நபர்களுக்கு ஆதரவாக, மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் மதுரை மாநகரக் காவல்துறை உளவுத்துறை பிரிவினர் செயல்பட்டு வருவதோடு, ஊடகத்தில் செய்தி வெளியாவதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை சாதாரணமாகப் பேசுவதற்கு மாநகரக் காவல் உளவுத்துறை அதிகாரிகள் உதவியதை, ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஊடகத்தினரை நோக்கி, அவதூறாகப் பேசி தாக்க முயன்றதால், நீதிமன்றம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

cnc

காவல்துறையினரின் செயல்பாட்டைப் பார்த்த பொதுமக்கள், வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் காவல்துறையினர் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினர்.

madurai police sathankulam
இதையும் படியுங்கள்
Subscribe