Skip to main content

சாத்தான்குளம்... கைதான 5 போலீசாரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு...

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
mm

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஐந்து போலீசாரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட 10 பேரில், 5 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்தது. 

 

மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமந்த்குமாரிடம் சி.பி.ஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில், 3 பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆஜராகி ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். 

 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை காலை 11 மணிக்கு இந்த மனு மீதான விசாரணை நடைபெறும். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா, முருகன் ஐந்து போலீஸாரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இவர்கள் ஐந்து பேரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் நாளை காலை 11 மணிக்கு ஆஜர்படுத்தப்படுவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.