Advertisment

சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து கிடைத்த திடீர் க்ரீன் சிக்னல்...

ddd

Advertisment

சசிகலாவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு முக்கியத் திருப்பமாக சசிகலாவை விடுதலை செய்வதற்கு பாஜக ஓ.கே. சொல்லிவிட்டது. டெல்லியில் இருந்து கிடைத்த இந்த க்ரீன் சிக்னலால் உற்சாகமான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கட்ட வேண்டிய அபராதத் தொகையான 30 கோடியை தயார் செய்யும் வேலைகளை சசிகலா தரப்பு இறங்கியுள்ளது என டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த க்ரீன் சிக்னல் சசிகலாவின் விடுதலைக்கு மட்டுமா அல்லது சசிகலா அதிமுகவில் செல்வாக்கான இடத்திற்கு வருவதற்கான க்ரீன் சிக்னலா என்பது தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகமே என்கிற சூழ்நிலையின் விளைவாக அதிமுகவை ஒற்றுமைப்படுத்த பாஜக சசிகலாவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதா என்பது தெரியவில்லை என்கிறார்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

admk sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe