சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பியூஷ் மானுஷ். சமூக ஆர்வலர். அவர், ஆஷா குமாரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒப்பந்தக்காலம் முடிந்த பிறகும் அவர் வீட்டைக் காலி செய்ய மறுப்பதாக ஆஷா குமாரி, சேலம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக பேசியபோது, அவரை பியூஷ் மானுஷ் ஆபாச வார்த்தைளால் திட்டியதாகவும், தாக்கி காயப்படுத்தியதாகவும் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் பியூஷ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புதன்கிழமை (பிப். 26) மாலையில் அவரை கைது செய்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள்கள் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் திடீரென்று பியூஷ் மானுஷை சேலம் மத்திய சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் பியூஷ் மானுஷின் பேஸ்ஃபுக் கணக்கில் அவரது மனைவி மோனிகா பியூஷ் பதிவிட்டுள்ள குறிப்பில், "வீட்டு உரிமையாளர் தாக்கல் செய்த பொய்யான வழக்கில் பியூஷை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் எஃப்.ஐ.ஆரின் நகல் வழங்கப்படவில்லை. அவர் இருக்கும் இடம் குறித்து சேலம் போலீசாரால் முறையான தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லை. பியூஷ் தான் வேலூர் சிறைக்கு மாற்றப்படுவதாக தகவல் கொடுத்தார். அவர் ஏன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் என்பதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை, தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.