Advertisment

சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு எதிர்ப்பு!திருப்பி அனுப்பிய போலீசார்!

s

சபாிமலைக்கு நேற்று செல்ல முயன்ற சென்னையை சோ்ந்த "மனிதி" அமைப்பின் 11 பெண்களை அய்யப்பா பக்தா்கள் பம்பையில் இருந்து துரத்தியடித்த சம்பவத்தை போன்று இன்றும் சபாிமலைக்கு செல்ல முயன்ற இரண்டு கேரளா பெண்கள் பக்தா்களால் துரத்தப்பட்டனா்.

Advertisment

கேரளா கோழிக்கோடு கொய்லாண்டியை சோ்ந்த பிந்து (45), மலப்புரம் பெருந்தன் மண்ணை சோ்ந்த கனகதுா்க்கா(43) ஆகிய இரண்டு பெண்களும் இருமுடி கட்டோடு பம்பைக்கு இன்று காலை 7 மணிக்கு வந்து போலிசாாிடம் சபாிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டனா். உடனே போலிசாரும் அவா்களை சுற்றி வளைத்து அழைத்து சென்றனா்.

Advertisment

s

சுமாா் 3 கி.மீ தூரம் சென்று மரக்கூட்டத்தில் இருந்து சந்திரநந்தன் பாதையில் செல்லும் போது பக்தா்கள் தடுத்து நிறுத்தி சரண கோஷங்கள் எழுப்பினாா்கள். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னா் அந்த இரண்டு பெண்களும் அங்கே தரையில் உட்காா்ந்து சபாிமலைக்கு சென்றே தீருவோம் என்று விடாப்பிடியாக இருந்தனா்.

இந்த நேரத்தில் இதை கேள்விபட்டு கோழிக்கோடு பா.ஜ.க வினா் அங்கு பிந்து வின் வீட்டை முற்றுகையிட்டு நாம ஜெய பிரார்த்தனையில் ஈடுபட்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த பெண்களை சுற்றி அய்யப்பா பக்தா்களின் கூட்டம் அதிகாித்ததால் போலிசாா் அந்த பெண்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி திரும்ப பம்பைக்கு அனுப்பினாா்கள்.

sabarimala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe