ஆதிதிராவிட நலத் துறையின் அலுவலர் சரவணக்குமார் ஏற்கனவே இந்தத் துறையில் பல்வேறு பதவிகளுக்கான பணி ஆணை வழங்குவதற்கு 16 நபர்களிடமிருந்து ஒவ்வொருவரிடமும் எட்டு லட்சம் ரூபாய் லஞ்சமாக பணம் கேட்டதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக அவர், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் பணியில் இருக்கும்போது ஓட்டுநராக இருந்தவரும் இவருடன் சேர்ந்து இந்த சர்ச்சையில் சிக்கியதால் அவரை விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்தனர்.
இந்நிலையில் தன்னுடைய பணியை திரும்ப பெறுவதற்காக இன்று 40 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்ற அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது விழுப்புரத்தில் பணியில் உள்ள ஓட்டுநரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.