ஆளுநருக்கே ரிட்டர்ன்; இன்று கூடுகிறது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

Returned to the Governor; A special assembly is meeting today

பல்கலைக்கழகங்கள் தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்களைத்தமிழக ஆளுநர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கே அனுப்பியது பேசுபொருளான நிலையில், இன்று சட்டப்பேரவை கூடி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட இருக்கிறது.

இதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் 11 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி வைப்பது தொடர்பாக முதல்வர் தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார். 'காரணம் ஏதும் குறிப்பிடாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல. அரசமைப்புச் சட்ட உறுப்பு 200ன் கீழ் மசோதாக்கள் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும். மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்' எனத்தனித் தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. அதேபோல் மறைந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிசங்கரய்யாவிற்கு இரங்கல் தீர்மானமும் இன்று நிறைவேற்றப்பட இருக்கிறது.

governor TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe