பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பற்றி முன்கூட்டியே நீரவ் மோடிக்கு தெரியுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11ஆயிரம் கோடிக்கு மேல் பண மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பியோடியவர் நீரவ் மோடி. இவர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை மோடி வெளியிடுவதற்கு முன்பாக ரூ.90 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ததாக தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஜீத் மேனன் தெரிவித்துள்ளார்.

Nirav

இதுகுறித்து விரிவாக பேசியுள்ள தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த குற்றவியல் வழக்கறிஞருமான மஜீத் மேனன், ‘கடந்த நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதற்குசில மணிநேரத்திற்கு முன்பு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் நீரவ் மோடி ரூ.90 கோடியை டெபாசிட் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பணத்திற்குப் பதிலாக அவர் தங்கத்தை மாற்றியிருக்கலாம் என தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்உள்நோக்கம் இருப்பதாகவே நினைக்கிறேன். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை என்ன நோக்கத்திற்காக மேற்கொண்டார்கள்? நம்மிடம் இருக்கும் தகவல்களின்படி, வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்துள்ளன. இதன்மூலம் தொடர்ந்து பெருநிறுவனங்களும், பெரும்பணக்காரர்களும் கடன் பெற்றுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

Nirav

பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் பல பெருமுதலாளிகளின் வங்கிக்கடன்கள் ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக அப்போதே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். பல மாநில முதல்வர்களும் அந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தனர்.

சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடியைச் செய்துவிட்டுவெளிநாட்டுக்குத் தப்பியோடினார் நீரவ் மோடி. அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பொருளாதார விழாவில் பிரதமர் மோடியுடன் சந்தித்ததற்கான புகைப்படங்கள் வெளியாகின. எனவே, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை நீரவ் மோடிக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டதோ? என்ற கேள்வியை பலர் பொதுத்தளத்தில் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

Demonitization Narendra Modi Nirav modi pnbfraud niravmodi diamond
இதையும் படியுங்கள்
Subscribe