அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த தீர்ப்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐவர் குழுவால் வழங்கப்படுகிறது.
இதன்பொருட்டு உ.பி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உபி, ராஜஸ்தான், ஜம்முவில் இணையதள சேவையை முடக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பிரதமர், மாநில முதலமைச்சர்கள் என்று பலரும் மக்களிடம் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தீர்ப்பை அளிக்க இருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றம் விரைந்துள்ளார். தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றம் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் அயோத்தியா தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.