mahinda

Advertisment

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மைத்ரிபால சிறிசேனாவின் கட்சி உடைந்து ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை அதிபரின் செயலகத்தில் அதிபர் சிறீசேனா சற்று முன்னர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் 11வது பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே.

Advertisment

ரணில் விக்ரமசிங்கேவும், மகிந்த ராஜபக்சேவும் அண்மையில் இந்தியா வந்து சென்ற நிலையில் இலங்கை அரசியலில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.