சென்னை தி.நகரில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதியானதாக தகவல். கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெற்றுள்ளதை அடுத்து, இன்னும் சற்று நேரத்தில் அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் இந்த கூட்டணி குறித்த தகவலை ராமதாஸ் - எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக அறிவிக்கவிருக்கின்றனர். இதை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணிராமதாஸ், ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள் அடையாறு ஓட்டலுக்கு வந்தனர்.

ராமதாசுக்கும், அன்புமணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும்பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

எ