Skip to main content

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு வழக்கறிஞராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம் சங்கர் நியமனம்! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Ram Shankar from Tamil Nadu has been appointed as the Special Advocate of the Tamil Nadu Law University.

 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். ராம் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பல்கலைக்கழகப் பதிவாளர் இன்று (02.12.2021) வழங்கினார். 

 

தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சட்டப் படிப்புக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்ட அரசு சட்டப் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் மற்றும் சேலம் ஆகிய எட்டு இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. 2002ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தால் அதன் வளாகத்தில் நிறுவப்பட்ட சீர்மிகு சட்டப் பள்ளியானது, நாட்டில் உள்ள பிற தேசிய சட்டப் பள்ளிகளின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளங்கலை சட்டப் படிப்புகள், முதுநிலை மற்றும் முனைவர் படிப்பிற்கான சட்டப் படிப்புகள் உட்பட சட்டம் சம்பந்தப்பட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன. 

 

இந்திய பார் கவுன்சில் (BCI) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவற்றால் இந்தப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU), காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் சங்கம், U.K. மற்றும் இந்திய பொது நிர்வாக கழகம், புதுதில்லி ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த நீதிபதிகள் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. 

 

இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராக டாக்டர். ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

ராஜபாளையம் நகரைச் சேர்ந்த ராம் சங்கர், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் டெல்லியில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் சட்டப் படிப்பில், இந்தியாவில் எப்படி உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

 

குருகிராம் ஜி.டி. கோயங்கா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் இவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.