Advertisment

கத்தாரில் பேட்ட மரண மாஸ் - ரசிகர்கள் உற்சாகம்

p

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’படம் நேற்று(10.1.2019) திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 69வயதில் இளைஞர் மாதிரி நடித்திருக்கும் ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு, 90களில் பார்த்த ரஜினி மாதிரி இருக்கு என்று ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்திருப்பதால், கட் -அவுட், பால் அபிஷேகம் எல்லாவற்றையும் தாண்டி, தமிழகத்தில் ஒரு திரையரங்கின் முன்பாக ரஜினிகாந்தின் வயதை மனதில் கொண்டு, 69 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் வைத்தனர். மேலும், சென்னையில் இப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கின் முன்பு, ரசிகர் ஒருவர் தனது திருமணத்தை நடத்தினார்.

Advertisment

p

இதேபோல் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் பேட்ட படம் திரையிடப்பட்ட அரங்கில் அங்குள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் கார்த்தி உள்ளிட்டோர் தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடினர். படம் பார்க்க வந்தோருக்கு பரிசளித்து மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வந்ததாலும், இப்படத்தில் பேட்ட வேலன் வேட்டி கட்டியிருப்பதாலும், கத்தாரில் இப்படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் வேட்டி, சட்டையில் வந்து அசத்தினர்.

petta rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe