Advertisment

ரஜினி கைதாகும் நிலை ஏற்படும்: சரத்குமார் எச்சரிக்கை!

சமூக விரோதிகள் யார் என்பதை கூறாவிட்டால் ரஜினி கைதாகும் நிலை ஏற்படும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சமூக விரோதிகள் யார் என்பதை கூறாவிட்டால் ரஜினி கைதாகும் நிலை ஏற்படும். உரிமைக்காக போராடும் மக்களை போராடக்கூடாது என்கிறாரா ரஜினி? போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறிடும் என்கிறார்.. சட்டம் ஒழுங்கு இல்லை என்கிறாரா?

போராட்டம் தான் வாழ்கையே.. போராடக்கூடாது என யாரையும் சொல்லக்கூடாது. உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது புத்தாண்டு வாழ்த்துகள் என சொன்னாரே? சமூக விரோதிகள் யார் என்பதை கூறாவிட்டால் நடிகர் ரஜினிகாந்தை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கடுமையாக சாடினார்.

sarathkumar rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe