Advertisment

முக்கிய உதவியாளரை தள்ளி வைத்திருக்கும் ரஜினி! 

தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய், தயாரிப்பாளர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை கடந்த 3 நாட்களாக நடத்திய அதிரடி சோதனைகளால் தமிழ்த்திரையுலகமே அதிர்ச்சியடைந்திருகிறது.

Advertisment

rajini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த ரெய்டுகளுக்கு மத்தியில் மற்றொரு ரெய்டு விவகாரத்தால் தனது முக்கிய உதவியாளர் ஒருவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தள்ளி வைத்திருக்கும் விவகாரம், திரையுலகம் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் சத்தமில்லாமல் பேசு பொருளாகியிருக்கிறது.

ரஜினியின் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் அவருக்கு மூன்று உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர் சஞ்சய்! ரஜினியின் பேட்ட மற்றும் தர்பார் படங்களில் சஞ்சய் நடித்தும் இருக்கிறார். ரஜினியின் பெர்சனல் ப்ரோக்ராம் அனைத்திலும் சஞ்சய் உடனிருப்பார். அது, சென்னையில் மட்டுமல்ல ; இந்தியா மற்றும் வெளிநாடுகள் பயணங்களின் போதும் தொடரும். தனது குடும்பத்தினரை அடுத்து சஞ்சய்க்குத்தான் ரஜினியிடம் முக்கியத்துவம் அதிகம்.

இந்தியாவின் டாப் லெவலில் இருக்கும் வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் பலரும் ரஜினியிடம் பேசுவதற்கு சஞ்சய் வழியாகத்தான் முயற்சிப்பார்கள். ரஜினிக்கு நெருக்கமான வி.வி.ஐ.பி.க்களின் தொடர்பு எண்கள் சஞ்சயிடம் மட்டுமே இருக்கும். அந்தளவுக்கு மிக முக்கியமானவராக இருந்த சஞ்சய், டிஸ்கவரி சேனலில் அட்வென்ஞ்சர் நிகழ்ச்சியை நடத்தும் பியர்ல் கிரில்ஸ் ரஜினியை வைத்து நடத்திய பந்திப்பூர் வனப்பகுதி பயணத்தில் இடம் பெறவில்லை. அந்த ப்ரோக்ராமில் சஞ்சய் இடம்பெறாதது, ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் தற்போதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

sanjay

இது குறித்து நாம் விசாரித்தபோது, ‘’ இரு வாரங்களுக்கு முன்பு தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அப்போது, அந்த நிறுவனத்தில் கிடைத்த சில தகவல்கள் ரஜினிக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பிறகே, தனது உதவியாளரை தள்ளி வைத்திருக்கிறார் ரஜினி. அதனால்தான் பந்திப்பூர் பயணத்தில் சஞ்சய் மிஸ்ஸிங் ! ’’ என்கிற தகவல்கள் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமான தரப்பிலிருந்து கிடைக்கின்றன.

Assistant rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe