Skip to main content

கராத்தே வீராங்கனைகளுடன் ரஜினி!

Published on 08/03/2018 | Edited on 08/03/2018
rajini



சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மாநாட்டை கமலஹாசன் நடத்தும் நிலையில், கராத்தே விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் பெற்ற வீராங்கனைகளுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரஜினிகாந்த். 
 

இந்திய கராத்தே சங்கத்தின் சார்பில், கராத்தே விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தங்கப்பதங்களை வென்ற கராத்தே வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தின விழாக்களை கொண்டாடியிருக்கிறார்  சங்கத்தின் தேசிய தலைவர் தியாகராஜன். 
 

rajini


முன்னதாக, தியாகராஜனுடன் சென்று ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர் கராத்தே வீராங்கனைகள். அவர்களுக்குப் பரிசுகள் தந்து மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்த ரஜினி, "பெண்களுக்கு மிக பாதுகாப்பு அரணாக இருப்பது கராத்தே. எனக்குப் பிடித்த விளையாட்டுகளில்  கராத்தேவுக்குத்தான் முதலிடம். நான் சினிமா நடிகராக அறிமுகமாகி ஆக்சன் ஹீரோவாக வளர்ந்ததற்கு கராத்தேதான் எனக்கு கைக்கொடுத்தது. அந்த கலையைக் கற்று பல்வேறு மெடல்களை நீங்கள் பெற்றிருப்பது சந்தோசம். கராத்தே விளையாட்டில் இன்னும் பல சாதனைகளைப் பெற வேண்டும்" என வீராங்கனைகளை வாழ்த்தினார் ரஜினி. 
 

ஒவ்வொரு வீராங்கனைகளையும், அவர்கள் கலந்துகொண்ட போட்டிகளையும், சாதித்த சாதனைகளையும் ரஜினியிடம் விளக்கினார் தியாகராஜன்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.   

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.