Advertisment

ராஜேந்திரபாலாஜி, வைகைசெல்வன் போட்டியிடும் தொகுதிகள்... 

ddd

அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இந்தப் பட்டியலில் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

Advertisment

இந்தநிலையில் அடுத்தக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குகிறது அதிமுக தலைமை. இதேபோல் திருச்சுழி தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்குகிறது. அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார் என்றும், சாத்தூர் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார் என்றும் சிவகாசியில் போட்டியிட்டு வெற்ற பெற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மான்ராஜ் போட்டியிடுகிறார் என்றும்சிவகாசி தொகுதியில் தனலெட்சுமி கணேசன் போட்டியிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. இதைப்பற்றி விசாரித்தபோது அதிமுகவினர் இது உத்தேசப்பட்டியல்தான், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியானால்தான் தெரிய வரும் என்கின்றனர்.

Advertisment
rajendra balaji Vaigai Selvan list Candidate admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe