அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகியும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டும், சில இடங்களில் மழையும் பெய்துவருகிறது. நேற்று இரவு சென்னையில் மழை பெய்ததால் இரவில் சிறிது குளிர்ச்சி நிலவியது.

Advertisment

rain

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி..

Advertisment

கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது, சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.