Rahul Gandhi says BJP does not want tribal children to get education

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை மொத்தம் 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 14ஆம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்கியது. மேலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் மஜூலி பகுதியில் இன்று (19-01-24) ராகுல் காந்தி யாத்திரையை மேற்கொண்டு பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க பழங்குடியின மக்களை காடுகளிலேயே வைத்திருக்க விரும்புகிறது. பழங்குடியின மக்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்பதை பா.ஜ.க விரும்பவில்லை. மேலும், அவர்களது குழந்தைகள் ஆங்கிலம் கற்பதையோ, தொழில் செய்வதையோ பா.ஜ.க விரும்பவில்லை.

Advertisment

பழங்குடியின மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் வழங்குவதற்கு நாங்கள் விரும்புகிறோம். அவர்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும். அதற்காக நாங்கள் சட்டம் இயற்றுவோம்” என்று கூறினார்.