திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.
திமுக தலைவர் உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கலைஞரின் நலம் விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தினமும் மருத்துவமனை வந்து செல்கின்றனர்.
அந்தவகையில், கலைஞர் நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)