கோவை, மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட கனகன், வர்ஷினி ப்ரியா என்ற இணையரை கனகனின் சகோதரர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisment

honour killing

ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகன் என்பவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வர்ஷினி ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் காதலிக்கும்போதே அவர்களது பெற்றோர்கள் இந்த காதலுக்கு சாதியை காரணம் காட்டி எதிர்த்துள்ளனர்.

இருந்தும் அவர்கள் வீட்டின் எதிர்ப்புகளைத்தாண்டி சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டே அன்றைய தினமே கனகனின் சகோதரன் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளான். இந்நிலையில் கனகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷினி ப்ரியா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டுள்ளது, கனகனின் பெற்றோர் எங்களிடம் முன்பே, திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் போட்டுவிடுவோம் என்று மிரட்டினர் என கண்ணீர் மல்க தர்ஷினியின் அம்மாகூறினார். இந்த சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.