/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puduchery 8999.jpg)
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் செல்லபட்டு கிராமத்தைச் சேர்ந்த 37 வயது நபருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை11 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us