Skip to main content

பி.ஆர்.ஓ.க்கள் அதிரடி மாற்றம்! 

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

tamil nadu assembly

 

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட பி.ஆர். ஓ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சரவணன் அரியலூர் மாவட்டத்திற்கும், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி கடலூர் மாவட்டத்திற்கும், திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகன் பிரைட் ஊட்டிக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன் ராமநாதபுரத்திற்கும், விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ள பிரசன்னா வெங்கடேசன் தலைமைச் செயலக பொருட்காட்சிக்கும், ஈரோடு மாவட்ட TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தீபா சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கும், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் ஈரோடு TNSTC யின் பி.ஆர்.ஓ.வாகவும், கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் சென்னை தலைமைச் செயலக நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமி கோவை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

http://onelink.to/nknapp


இதுதவிர, ஏ.பி.ஆர்.ஓ.க்களாக இருந்த 6 பேர் பி.ஆர்.ஓ.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, சிவகங்கை  கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு, சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கரூர் செந்தில்குமார் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கிருஷ்ணகிரி மோகன், வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .

Next Story

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Important announcement released by the Department of Education on 5 consecutive days off for schools

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, தமிழக அரசு, தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தல் பணிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.