Advertisment

’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம்

k

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது கொலைமுயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

Advertisment

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை கருணாசை கை செய்தது. கைது செய்யப்பட்ட கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கைதுக்கு முன்னதாக கருணாஸ் வீட்டின் முன் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisment

ks

கைது செய்யப்ப்பட்டு அழைத்துச்செல்லப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ’’பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன். கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யும் அளவிற்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன் என்று தெரியவில்லை.

எம்.எல்.ஏவை கைது செய்யும் முன் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். சபாநாயகர் அனுமதி அளித்தால்தான் எம்.எல்.ஏவை கைது செய்ய முடியும். சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை’’என்று கூறினார்.

ஆதரவாளர்கள் திரண்டு வந்து அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது கருணாஸ், ’’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’’என்று ஆவேசமாக கூறினார்.

karunas arrest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe