Advertisment

“நான் எப்போது இஸ்லாமியர்கள் பற்றி அப்படி சொன்னேன்?” - பின்வாங்கும் பிரதமர் மோடி

Prime Minister Modi speech about hindu - muslim

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வந்தது. மேலும், இந்த கருத்து குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ராஜஸ்தானில் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிக குழந்தைகளைப் பற்றி பேசும்போது இஸ்லாமியர்களை மட்டுமே பேசினேன் என்று உங்களுக்கு யார் சொன்னது? இஸ்லாமியர்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறீர்கள்? ஏழைக் குடும்பங்களிலும் இதுதான் நிலை. வறுமை இருக்கும் இடத்தில், அவர்களின் சமூக வட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிகமான குழந்தைகள் உள்ளனர்.

நான் இந்து என்றோ அல்லது இஸ்லாமியர்கள் என்றோ குறிப்பிடவில்லை. ஒருவர் எவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். உங்கள் குழந்தைகளை அரசே கவனிக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி விடாதீர்கள். என் நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் இந்து-முஸ்லிம் மாறிய நாளில், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக இருப்பேன். மேலும் நான் இந்து-முஸ்லிமாக இருக்கமாட்டேன் மாட்டேன். இதுதான் என் தீர்மானம்” என்று கூறினார்.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe