Advertisment

தனி விமானம் மூலம் சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்!

president

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த அவரை விமானநிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிரி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisment

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் 2.20 அளவில் சென்னை வந்தடைந்தார். இதையொட்டி, சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

kalaignar President Ramnath Govind
இதையும் படியுங்கள்
Subscribe