Skip to main content

பிரகாஷ் காரத் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது: திருச்சி சிவா எம்.பி. அறிக்கை

Published on 18/02/2018 | Edited on 18/02/2018


நாட்டின் பன்முகத் தன்மையை எதிர்க்கும் கட்சிகளின் ஒன்றிணைத்த போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக பிரகாஷ் காரத் பேச்சு அமைந்துள்ளது என்று தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


“மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன்அவர்கள் இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் ஈரம் காய்வதற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு.பிரகாஷ் காரத் அவர்கள் “திராவிட முன்னேற்றக் கழகம் தேக்க நிலை அடைந்திருக்கிறது” என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் பேசி அது பத்திரிக்கை செய்தியாக வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
 

தமிழகத்தில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாகவும், ஏழரைக் கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாபெரும் இயக்கமாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதை அனைவரும் அறிவர். மாநிலத்தில் மக்களை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் உத்வேகத்துடன் போராட்டங்களையும், சாலை மறியல்களையும் நடத்தி பிரதான எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் தளபதி அவர்களே கைதான சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன. விவசாயிகள் போராட்டமாக இருந்தாலும் சரி, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போராட்டமாக இருந்தாலும் சரி - ஏன் பேருந்து கட்டண உயர்வாக இருந்தாலும் சரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஒத்த கருத்துள்ள தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் சென்று மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஊழல் துர்நாற்றம் அடிக்கும் இந்த அதிமுக அரசையும், பன்முகத் தன்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசையும் எதிர்ப்பதில் இன்றைக்கு முன்னனியில் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். அகில இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் நன்கு தெரியும்.
 

ஆனாலும் ஊழலுக்கு எதிராகவும், நாட்டின் பன்முகத் தன்மைக்கு சீரழிப்போருக்கு எதிராகவும் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து “தேக்க நிலைமை அடைந்துவிட்டது” என்று கூறுவது, முனைப்போடு திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து நடத்தி வரும் மக்களுக்கான போராட்டங்களை முனை மழுங்க வைக்கும் முயற்சியில் திரு. பிரகாஷ் பிரகாத் அவர்கள் திடீர் ஆர்வம் காட்டுகிறாரோ? என்ற சந்தேகம் எழுகிறது.
 

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்திக் கொள்ள திரு.பிரகாஷ் காரத் அவர்கள் ஆலோசனை வழங்கலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் வீறு கொண்டு இயங்கி வரும் ஆற்றல்மிகு தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளையும் - தமிழக மக்களின் பேராதரவை பெற்றுத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பார்த்து “தேக்க நிலைமை அடைந்துவிட்ட கட்சி” என்று கூறுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டனும் மட்டுமல்ல - தமிழக மக்கள் யாரும் துளிகூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை திரு.பிரகாஷ் காரத் அவர்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 

அது மட்டுமின்றி மக்கள் பிரச்சினைகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக திரு.பிரகாஷ் காரத் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு “விருப்பமுள்ள” கருத்தாக இருக்கலாம். ஆனால் நாட்டின் பன்முகத் தன்மையை எதிர்க்கும் கட்சிகளின் ஒன்றிணைத்த போராட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

''பிரதமரும் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை, தொடர்புடைய அமைச்சர்களும் விளக்கம் தருவதில்லை''-திருச்சி சிவா பேட்டி!  

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

 "The prime minister does not come to the parliament and the relevant ministers do not give explanations" - Trichy Siva interview!

 

கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவை அலுவல நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில், இன்று (26/07/2022) காலை மாநிலங்களவை கூடிய போது, விலைவாசி உயர்வு, எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை முதலில் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மக்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் பிற்பகல் 11.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 

பின்னர், மாநிலங்களவை மீண்டும் கூடிய போது, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதால், தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி என்விஎன் சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உள்ளிட்ட 6 பேரும் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷ்மிதா தேவ், டோலாசென் உள்பட 19 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

 "The prime minister does not come to the parliament and the relevant ministers do not give explanations" - Trichy Siva interview!

 

இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பேசிய திருச்சி சிவா, ''தொடர்ந்து ஒருவார காலமாக குரலெழுப்பி இன்று கொஞ்சம் எல்லைமீறி  திமுகவிலிருந்து 6 பேர் என மொத்தம் 19 உறுப்பினர்களை இதுவரை இல்லாத அளவிற்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். எதிராக குரல் கொடுப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ரொம்ப கவனமாக இருக்கிறார்களே தவிர எங்கள் குரலை கேட்கவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் அரசாங்கம் ஏன் ஓட வேண்டும். நல்ல ஆட்சி நடத்துகிறார்கள், நிர்வாகம் சரியாக இருக்கிறது என்றால் விளக்கம் சொல்ல வேண்டியது தானே. பிரதமரும் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை, தொடர்புடைய அமைச்சர்களும் விளக்கம் தருவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் கூக்குரல் இடுகிறார்கள், அவையை நடத்தவிடாமல் இடையூறு செய்கிறார்கள் என தவறான ஒரு மாயையைப் பரப்புகிறார்கள்'' என்றார். 

 

Next Story

எம்.பி.யின் மகனை கைது செய்த தமிழக காவல்துறை! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

dmk MP's son arrested by police

 

தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா அதிரடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த ஜூன் 11- ஆம் தேதி அன்று உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும்,தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பா.ஜ.க பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தை எடுத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகப் பேருந்தின் உரிமையாளர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். 

 

இதையடுத்து, சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை இன்று அதிரடியாக கைது செய்தனர்.