Advertisment

மதுப் பிரியர்கள் மீது போலீசார் தடியடி (படங்கள்) 

Advertisment

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முதல் நாளான இன்றுஅனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை அருகே திருவள்ளுர் பொன்னேரி வட்டத்தில் வரும் பெரவள்ளூர் கிராமம் போராக்ஸ் நகரில் மது பிரியர்கள், டாஸ்மாக் நிர்வாகம் சொல்லிய 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டும், முட்டி மோதிக்கொண்டும் நின்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு லேசான தடியடி நடத்தினர். இருப்பினும் பின்னர் மது பிரியர்கள் மீண்டும் வரிசையில் முட்டி மோதிக்கொண்டு நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

issue open tasmac shop
இதையும் படியுங்கள்
Subscribe