Advertisment

பிக்பாஸ்-2 ல் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார்!

ponnambalam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே மஹதி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா, ஷாரிக் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் சென்ராயன், ஜனனி ஐயர், மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனால் யார் வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியது. காரணம், சென்ராயன் மற்றும் ஜனனி ஐயருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு.

ponnambalam

அதே போல் ஆரம்பத்தில் இருந்து பொன்னம்பலம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இடம்பெற்று வந்தாலும் மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். கடந்த வாரம் வெளியேற்றபடுவோர்கள் பட்டியிலிலும் பொன்னம்பலம் பெயர் இடம்பெற்றது. அதில் ஷாரிக் அல்லது பொன்னம்பலம் வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் கருதினர். ஆனால், பொன்னம்பலம் தப்பினார். ஷாரிக் வெளியேறினார்.

கெட்ட வார்த்தை பேசுவது, சர்வாதிகாரி ஐஸ்வர்யாவை கழுத்தை பிடித்து குண்டுகட்டாகத் தூக்கி, நீச்சல்குளத்தில் போட்டது, ஒவ்வொருவருக்கும் அறிவுரைகளை வழங்கியது, டாஸ்க்கில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளாமல் இருப்பது என ஒவ்வொரு வாரமும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் கடந்து, வெளியேறாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்.

இப்படி ஆரம்பத்தில் இருந்து மக்காளால் காப்பாற்றப்பட்டு வந்த பொன்னம்பலம் இந்த வாரம் கடும் போட்டி நிலவியதால், குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த பாகம் போன்றே இந்த பாகத்திலும் புதிய போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் என்ற முறையில் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டின் புதிய போட்டியாளராக உள்ளே நுழைய போவதாக கூறப்படுகிறது.

kamal big boss 2 ponammbalam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe