pon manickavel

Advertisment

சென்னை அருகே போரூரில் காரில் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலையை, ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான டீம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சென்னை அருகே பழங்கால சிலையை ஒரு கும்பல் காரில் கடத்தி செல்ல இருப்பதாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழுவினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பொன்.மாணிக்கவேல் குழுவினர் மூன்று ஆட்டோக்களில் போரூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் காட்டுப்பாக்கத்தில் காத்திருந்தனர்.

Advertisment

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா நானோ கார் ஒன்றை மடங்கினர். அந்த காரை அவர்கள் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ஒன்றே முக்கால் அடி உயரம், 20 கிலோ எடையுள்ள அம்மன் ஐம்பொன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவள்ளுர் அருகே உள்ள கோயில் ஒன்றிலிருந்து இதனை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், அவர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.