
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்தது சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றும் கூறியது. மேலும் ஒரு வருடத்திற்கு பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாகவும் நியமித்துள்ளது. இன்று மாலையுடன் ஓய்வு பெற இருந்த பொன். மாணிக்கவேல் இன்னும் ஓராண்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார்.