கோபாலபுரத்தில் குவியும் அரசியல் தலைவர்கள், திமுக தொண்டர்கள்! (படங்கள்)

திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் இல்லம் குவிந்து வருகின்றனர்.

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக இன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கலைஞரின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலையே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறுது.

இதனையடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று இரவு கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து, கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் மைய்யம் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் குவிந்த வண்ணம் உள்ளனர்.

kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe