pro

Advertisment

போராட்டத்தை கட்டுப்படுத்த தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியட்டுள்ள அறிக்கையில்,

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு காவல்துறை வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு சட்டப்பூர்வமான மேல்நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை ஏற்று ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.