Advertisment

பா.ம.க. தேர்தல் சிறப்பு பொதுக்குழு! கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

சென்னையில் மார்ச் 1-ஆம் தேதி பா.ம.க. தேர்தல் சிறப்பு பொதுக்குழு நடைபெற உள்ளது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisment

pmk

ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) திருமண அரங்கத்தில் பொதுக்குழு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

Advertisment

2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு கூறியுள்ளார்.

g.k.mani Alliance Election pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe