பாமக போட்டியிடும் 23 தொகுதிகள்? 

 AIADMK

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்கள் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நீடிக்கிறது என்று அதிமுக தலைமை சொல்லி வந்தது. அதன்படி கூட்டணியில் உள்ள பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவாத்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் பாமக போட்டியிடும் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது. வேளச்சேரி, செய்யாறு, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், ஓமலூர், மேட்டூர், பரமத்தி வேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, அணைக்கட்டு மற்றும் ஆற்காடு ஆகிய தொகுதிகள் இந்தப் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு பாமக தரப்பில் அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pmk tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe