மக்களவை தேர்தல் கூட்டணியை முதலில் இறுதி செய்து அறிவித்தது அதிமுக. சென்னையில் இன்று பாமகவுடனான நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள், பாமக பிரமுகர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் அதிமுக - பாமக இரு கட்சியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மக்களவை தேர்தலில் பாமவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 7 தொகுதிகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

p