ப்ளாஸ்டிக் தடை கலந்த சில நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இதற்கான புதிய அபராத விதிகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisment

plastic ban

அதன்படி, தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் முதல் முறை இரண்டு இலட்சம் ரூபாயும், அதுவே தொடர்ந்தால் ஐந்து இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். ப்ளாஸ்டிக்கை சேமித்தாலோ, யாருக்காவது கொடுத்தாலோ, எடுத்துச்சென்றாலோ முதல் முறை ஒரு இலட்சம் ரூபாயும், அதுவே தொடர்ந்தால் இரண்டு இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். ப்ளாஸ்டிக்கை விற்பனை செய்தாலோ, விநியோகம் செய்தாலோ முதல் முறை ஐம்பதாயிரம் ரூபாயும், அதுவே தொடர்ந்தால் ஒரு இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். ப்ளாஸ்டிக்கை வணிகரீதியில் பயன்படுத்தினால் முதல் முறை 25 ஆயிரம் ரூபாயும், அதுவே தொடர்ந்தால் ஐம்பதாயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். வீடுகளில் பயன்படுத்தினால்முதல் முறை 500 ரூபாயும், அதுவே தொடர்ந்தால் 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். உத்தரவு அமலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை 300 டன் ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.