Skip to main content

இயற்பியலுக்கான நோபல்பரிசு அறிவிப்பு...

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
nobel

 

 

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆர்தர் ஆஸ்கின், ஜிரார்டு மவுரு, டோனோ ஸ்டிக்லாண்டுவுக்கு ஆகியோருக்கு  இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன்  தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவினர் அறிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Nobel Prize in Physics Announcement

 

2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வு குழு நேற்று (02.10.2023) அறிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வு குழு அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது இயற்பியலுக்கான நோபல் பரிசு

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

 Nobel Prize in Physics shared with three

 

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிரான்சைச் சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசர், ஆஸ்திரியாவை சேர்ந்த ஷிலிங்கர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.